தமிழக பாஜக நிர்வாகிகள் பட்டியல்: முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாததால் சிறுபான்மையின நிர்வாகிகள் அதிருப்தி

By செய்திப்பிரிவு

தமிழக பாஜகவில் சிறுபான்மை யினருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக பாஜகவில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சிறுபான்மை சமூகத்தினர் சிலர் இதுதொடர்பாக கூறியதாவது:

தமிழக பாஜகவின் துணைத் தலைவராக முனவரி பேகம் இருந்தார். அவர் தேசிய சிறுபான்மை பிரிவு துணைத் தலைவரான பின், தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலில், சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று கருதியிருந்தோம். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 25 புதிய நிர்வாகிகளில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர்கூட இல்லை. இது வருத்தமளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்டி

இது தொடர்பாக பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு துணைத் தலைவரான முனவரி பேகம் கூறியதாவது:

பாஜகவை பொறுத்தவரை உழைப்பு மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் பதவிகள் வழங்கப்படும். நான் தேசிய பொறுப்புக்கு சென்ற பின், மாநில அளவில் பொறுப்பு வழங்குவதற்காக சிறுபான்மை பிரிவை சேர்ந்த பலரது பெயர்களை முன்வைத்து ஆலோசனை நடத்தினோம். ஆனால் அவர்கள் அனைவரும் கட்சியில் போதிய அனுபவம் இல்லாதவர்களாக இருந்தனர். ஆசிம் பாட்சா, ஷேக் தாவூத் போன்ற சில மூத்தவர்கள் இருந்தாலும், அவர்கள் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவில் பொறுப்பில் உள்ளனர். எனவே புதிதாக யாரையும் நியமிக்க முடியவில்லை.

வருங்காலத்தில்..

இன்னும் ஓராண்டு காலத் தில் மீண்டும் பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படு வார்கள். அப்போது சிறு பான்மை பிரிவை சார்ந்தவர் களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்