தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியில் காவல் அதிகாரி ஆய்வு

சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக உள்ளது என புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் ஆய்வு செய்த பின்னர் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தார்.

அதிமுக ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி அணிகள் ஒன்றாக இணைந்ததை அடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுத்தனர். இதன் பின்னர் தனி அணியாக புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தங்கியிருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவே அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சொகுசு விடுதிக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் வருகை தந்தார். அங்கு அவர் சில மணி நேரம் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "விடுதியில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக உள்ளது. எவ்வித புகார் அடிப்படையிலும் நான் இங்கு வரவில்லை. இது வழக்கமான ஆய்வு. எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் யாரிடமும் நான் பேசவில்லை. மேலும், இது தனியார் விடுதி இங்கு யார் வேண்டுமானாலும் அவரவர் விருப்பப்படி தங்கிக்கொள்ளலாம்" எனக் கூறி சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்