முல்லைப்பெரியாறு: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கேரளா ஏற்பாடு

By ராய் மேத்யூ

வரும் 23-ஆம் தேதி, முல்லைப்பெரியாறு அணை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க கேரள அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

இது குறித்து கேரள மாநில நாடாளுமன்ற எம்.பி.க்கள் மற்றும் கேரள அமைச்சரவை ஆகியோர் எடுத்த முடிவை கேரள அமைச்சர் கே.சி.ஜோசப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான சூழ்நிலை பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கேரள எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் முல்லைப்பெரியாறு விவகாரத்தை எழுப்பவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்த மக்களின் அச்சம், அணையின் பாதுகாப்பற்ற நிலை, மற்றும் பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு ஏற்படும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் ஆகிய விவகாரங்களை எம்.பி.க்கள் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று கே.சி.ஜோசப் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து கேரள அமைச்சரவை விரிவாக விவாதித்ததாகவும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் ஏற்படும் தாக்கம் குறித்த அறிக்கையை அளிக்குமாறு வனப்பாதுகாப்பு துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முல்லைப்பெரியாறு அணையின் தற்போதைய நீர்மட்டம் 141.6 அடியாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்