மரம் விழுந்து பலியான 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே மரம் விழுந்து பலியான 2 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் ஆர்.டி.அரசு (செய்யூர்) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், புத்திரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் சுப்பிரமணி, கபாலியின் மகன் முருகன், தண்டபாணியின் மகன் சுதர்சனம் ஆகியோர் கடந்த நேற்று புத்திரன்கோட்டையிலிருந்து சூனாம்பேடுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையோரத்தில் இருந்த ஆலமரம் பகுதியளவு முறிந்து விழுந்தததில் முருகன் சம்பவ இடத்திலும், சுப்பிரமணி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். இந்தச் செய்தியறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

அவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பலியான இருவரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுதர்சனத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்