சென்னையில் மேலும் 15 வார்டுகளில் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லை: மக்கள் கருத்து கூற மாநகராட்சி அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியில், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத பகுதிகளாக மேலும் 15 வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், திறந்தவெளி மலம் கழித்தல் முறையை ஒழிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக 46 வார்டுகளில் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லை என ஏற்கெனவே அறிவிக்கப் பட்டது.

அதைத் தொடர்ந்து தற்போது 8, 10, 28, 33, 35, 36, 40, 48, 51, 97, 107, 169, 176, 179, 197 ஆகிய 15 வார்டுகளில் உள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளில் பணிபுரியும் அலு வலர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், ‘திறந்தவெளியில் மலம் கழிப்ப தில்லை’ என மாநகராட்சியிடம் சான்று சமர்ப்பித்துள்ளனர். தங்களது சொந்த வளாகத்தில் உள்ள கழிப்பறைகளைப் பயன் படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜூலை 15-ம் தேதிக்குள்

கழிப்பறை இல்லாத குடும் பங்கள், தங்கள் வளாகத்தில் கழிப்பறை கட்ட போதிய இடம் இருக்கும் பட்சத்தில், மத்திய அரசு உதவியுடன் கழிப்பறை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதிய இடம் இல்லாவிட்டால், அவர்கள் தங்கள் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள ஒரு சமுதாயக் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகள், குறை களை அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங் களில் ஜூலை 15-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இணைப்பிதழ்கள்

22 mins ago

தமிழகம்

32 mins ago

இணைப்பிதழ்கள்

49 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்