ஓஎன்ஜிசி நிர்வாகம் நிரந்தரமாக வெளியேற வலியுறுத்தி கதிராமங்கலத்தில் அனைத்துக் கட்சியினர் பேரணி: கிராம மக்கள் உட்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்க லத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற பேரணி நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி வயல் வழியாக சென்ற ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. இதைக் கண்டித்து மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து, போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடு பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட் டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீ ஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் கடையடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட் டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே, கதிராமங்கலத் தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஓஎன்ஜிசி நிர்வாகம் கிராமத்தை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று அனைத்துக் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.

கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் சிவராமபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில், வைகோ, இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன், டி.ஆர்.லோகநாதன், எம்.ராஜாங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் உட்பட சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அய்யனார் கோயில் திடலில் ஒன்று கூடினர். பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில், அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் பலரும் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

51 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்