கிராம மக்கள் பங்களிப்புடன் ஓபிஎஸ் நிலத்தை வாங்க முடிவு

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் பிரச்சி னைக்குரிய கிணறு அமைந்துள்ள 40 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கு கிராமக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்களிடம் நிதி திரட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

லெட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்களின் குடிநீர் ஆதாரமாக ஊராட்சிக்கு சொந்த மான கிணறு உள்ளது. இதன் அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமியின் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் பெரிய கிணறு தோண்டியதால் ஊராட்சிக்கு சொந்தமான கிணறு வற்றியது. இதனால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதைக் கண்டித்தும், கிணற்றை கிராமத்துக்கு வழங்க வலியுறுத்தியும் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கிராம மக்களின் பல்வேறு போராட் டங்களுக்குப் பிறகு இப்பிரச்சினை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத் தினர்.

இதில் 90 நாட்கள் கிணற்றுத் தண்ணீரை கிராம மக்கள் பயன்படுத்திக்கொள்வது, அதற் குள் 40 ஏக்கர் நிலத்தை கிராமத் தினர் வாங்கிக் கொள்வது குறித்து முடிவு செய்வது என்று உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கிணற் றின் பயன்பாட்டை கிராமக் குழுவினரிடம் ஓபிஎஸ் தரப்பினர் ஒப்படைத்தனர்.

லெட்சுமிபுரம் கிராம மக்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் கிணறு உள்ள தோட்டத்தை ஊராட்சி வாங்கிக் கொள்வது என்று நேற்று முன்தினம் இரவு முடிவு செய்யப்பட்டது.

மேலும் 90 நாட்கள் குடிநீர் வழங்க சம்மதித்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு நன்றி தெரிவிக் கப்பட்டது.

அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ஆறு கோடி ரூபாய் என்பதால், அத்தொகையை கிராம மக்களிடம் 90 நாளில் வசூலிக்க தனி குழு அமைக்கப்பட உள்ளது. நிதி திரட்டும் பணிகளை விரைவில் அவர்கள் தொடங்குவர். நிலத்தை கிராம மக்கள் வாங்கும் பட்சத்தில் கிணற்று பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்