ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு: விநாடிக்கு 1,300 கனஅடியாக உயர்வு

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித் துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் வறட்சியின்போது முழுவதுமாக வறண்டுபோன ஒகேனக்கல்லில், சமீபத்தில் சுற்றுவட்டாரப் பகுதி களில் பெய்த கோடை மழையால் மிதமான நீர்வரத்து நிலவி வந்தது. ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு பகுதியில் அமைந்துள்ள மத்திய நீர்வள அளவீட்டு மையத்தின் அளவுப் படி நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி விநாடிக்கு 116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதற்கிடையில் கடந்த ஒரு வாரம் முன்பு கர்நாடகா மாநில அணைகளில் இருந்து விநாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று அதிகாலை ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு பகுதிக்கு வந்து சேர்ந்தது. இருப்பினும், நேற்று காலை அளவீட்டின்படி விநாடிக்கு 1,200 கன அடி அளவிற்கு தண்ணீர் வந்தது. மாலை நிலவரப்படி விநாடிக்கு 1,300 கன அடியாக நீர் வரத்து அதிகரித்தது. கர்நாடகாவில் 6,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டபோதும் வரும் வழிநெடுகில் ஏற்படும் சேதாரத்திற்கு பின்னர் 1,300 கன அடி என்ற அளவிற்கே தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டாலோ அல்லது சுற்றுவட்டாரப் பகுதி களில் கனமழை பெய்தாலோ தான் நீர்வரத்தின் அளவு மேலும் அதிகரிக்கும். புதிய நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் அருவி யில் விழும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. எனவே, நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்