1,188 காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு: சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் - நேர்முகத் தேர்வை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சிறப் பாசிரியர்கள் முன்பு வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனி யாரிட்டி) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். கடந்த 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு பள்ளி ஆசிரியர்களைப் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யும் நடைமுறையை பின் பற்றத் தொடங்கியது. அந்த அடிப் படையில், சிறப்பாசிரியர்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தி தேர்வுசெய்ய முடிவு செய்தது.

இது தொடர்பாக கடந்த 17.11.2014 அன்று அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் உயர் கல்வித்தகுதி, பணி அனுபவம் நேர்முகத்தேர்வு போன்ற வற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டது. மொத்தமுள்ள 100 மதிப்பெண் களில் எழுத்துத் தேர்வுக்கு 95 மதிப் பெண்கள் ஒதுக்கப்பட்டன. எஞ்சிய 5 மதிப்பெண்ணில் உயர் கல்வித் தகுதிக்கு அரை மதிப்பெண், அரசு பள்ளி அனுபவம் இருந்தால் 1 மதிப்பெண், தனியார் பள்ளி அனுபவம் எனில் அரை மதிப்பெண், என்சிசி, என்எஸ்எஸ், நுண்கலை (ஃபைன் ஆர்ட்ஸ்) சாதனை உள்ளிட்ட கல்வி அல்லாத இதர செயல்பாடுகளுக்கு ஒன்றரை மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு ஒன்றரை மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1,188 காலியிடங்கள்

எழுத்துத் தேர்வு நீங்கலாக மற்ற பிரிவுகளுக்கான 5 மதிப்பெண்களில் அரை மதிப்பெண் வழங்க வேண்டியிருந்தால் பல் வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகலாம். எனவே, அரை மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்றும் முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வைப் போன்று வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கு, பதிவுசெய்து காத்திருக்கும் ஆண்டுக்கு தகுந் தாற்போல் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கலாம் என்றும் அரசுக்கு யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த சூழ்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அண் மையில் வெளியிட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சிறப்பாசிரியர் நியமனம் தொடர் பான அறிவிப்பும் இடம்பெற்றது. 1,188 சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்ய ஜூலை 3-வது வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆகஸ்டு 19-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

நேர்முகத் தேர்வு நீக்கம்

இந்த நிலையில், எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் இணையதளத்தில் வெளியிட்டது. ஏற்கெனவே வெளி யிடப்பட்ட அரசாணையில் குறிப் பிடப்பட்டுள்ளவாறு, சிறப்பாசிரியர் நியமன முறை அமைந்திருக்குமா அல்லது புதிய முறை கொண்டு வரப்படுமா என்று தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் தொழிலாசிரியர் பயிற்சியை முடித்த சுமார் 2 லட்சம் பேர் எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறார்கள்.

உயர் அதிகாரி விளக்கம்

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “எழுத்துத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட அரை மதிப் பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்றவும், ஓவியம், இசை, உடற்கல்வி, தையல் பாட ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு அவசியமில்லை என்பதால் நேர்முகத் தேர்வை நீக்கிவிடவும் முடிவுசெய்துள்ளோம். சிறப்பாசி ரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

35 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்