மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு? - மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) இருந்து விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாக் கள் தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிறை வேற்றப்பட்டன. இந்த சட்ட மசோ தாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்காக அனுப்பி வைக்கப்பட் டன. அது ஏற்கப்படுகிறதா, நிராகரிக்கப்படுகிறதா என எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த சூழலில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முது நிலை மருத்துவப் படிப்புகளுக் கான கலந்தாய்வு நடத்தி முடிக் கப்பட்டது. இதில் அரசு மருத்து வர்களுக்கான 50 சதவீத இடஒதுக் கீடுக்கு பதிலாக, புதிதாக மதிப் பெண் முறை கொண்டுவரப்பட் டது. இதைத் தொடர்ந்து நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக ளுக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், ஏழை, கிரா மப்புற மாணவர்கள் பாதிக்கப் படுவதை தடுக்க எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாண வர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந் தாய்வை கடந்த 17-ம் தேதி தொடங்க தமிழக அரசு திட்ட மிட்டிருந்தது. கடந்த 14-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிட இருந்த நிலையில், சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் திட்டமிட்டபடி கலந்தாய்வு தொடங்கவில்லை. தரவரிசைப் பட்டியலும் வெளியி டப்படவில்லை. அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்த தமிழக அரசு, பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த முடிவு செய்தது. அதன்படி நேற்று டெல்லி சென்ற முதல்வர் கே.பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு கோரி பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து வலியு றுத்தி வருகின்றனர். இக்கோரிக் கையை வலியுறுத்தி பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அன்புமணி ராமதாஸ் சந்தித் தார். சி.விஜயபாஸ்கர் தலைமையி லான அமைச்சர்கள் குழுவினர், அதிமுக, திமுக எம்பிக்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர்.

இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து 2 அல்லது 3 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாயின. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இன்னும் உறுதியான தகவல் கள் கிடைக்கவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தால் ஏழை, கிராமப்புற மாணவர்க ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்