தமிழகத்தில் இனி ஒரு கட்சி ஆட்சி கூடாது: திருமாவளவன் உறுதி

By செய்திப்பிரிவு

மக்கள் நலக்கூட்டணி சார்பில் சேலம் போஸ் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, “திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் நடக்காது என்று ஸ்டாலின் சொல் கிறார். ஆனால், கருணாநிதியின் மனைவி, மகள், பேரன் ஆகி யோர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. அதிமுக தலைமை மீது வழக்கு உள்ளது. இன்னொருவர், நான் முதல்வரானால், முதல் கையெழுத்து மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்கிறார்.

ஆனால், மத்திய அமைச்ச ராக இருந்தபோது போட்ட முதல் கையெழுத்து, அவரது தலை யெழுத்தை மாற்றிவிட்டது. மக்கள் நலக்கூட்டணியில் இருக் கும் எங்கள் மீது யாராவது ஊழல் புகார் தெரிவிக்க முடி யுமா?” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, “மக்கள் நலக்கூட் டணி அடுத்த தேர்தலிலும் தொடரும். தமிழகத்தில் இனி ஒரு கட்சி ஆட்சி இருக்கக்கூடாது. முதல்வராகும் தகுதி வைகோ, ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோருக்கு இல்லையா?” என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோரும் கூட்டத்தில் பேசினர். முன்னதாக அரூரில் நடந்த கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பேசினார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

30 mins ago

வாழ்வியல்

21 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்