ரயில் தடம் புரண்ட இடத்தில் சீரமைப்பு பணி நிறைவு

By செய்திப்பிரிவு

ஊத்தங்கரை அருகே சென்னை - பழநி விரைவு ரயில் தடம் புரண்ட இடத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்து தொடங்கி யது.

சென்னையில் இருந்து பழநி செல்லும் விரைவு ரயில் நேற்று முன்தினம் அதிகாலை ஊத்தங்கரை அடுத்த தாசம்பட்டி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதில், ரயில் இன்ஜின், 2 பொதுப் பெட்டிகள் பாதையை விட்டு தனியாகச் சென்றன.

இந்த பெட்டிகளை அப்புறப் ப டுத்தும் பணியில், ஈரோடு, திருப்பூ ரில் இருந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். இதனால் சேலத்தில் இருந்து வந்த ரயில்கள் மொரப்பூரிலும், சென்னையில் இருந்து வந்த ரயில்கள் ஜோலார் பேட்டையிலும் நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

விபத்துக்குள்ளான இன்ஜின் மற்றும் பெட்டிகள் ராட்சத கிரேன்கள் மூலமாக அப்புறப்படுத்தப்பட் டன. நேற்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் அனைத்து பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அதிகாலை 2 மணி முதல் 2 வழிப்பாதையிலும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. சீரமைப்புப் பணி காரணமாக ரயில் கள் தாமதமானதால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்