வேலூர் மத்திய சிறையில் முருகனை சந்திக்க தாயாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அவரது தாயாருக்கு அனுமதி அளிக்கும்படி உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண் டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவரிடம் இருந்து சில நாட்களுக்கு முன்பு, 2 செல்போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறை விதிகளின்படி தடை செய்யப் பட்ட பொருளை முருகன் பயன் படுத்திய குற்றச்சாட்டின் அடிப் படையில், அவரை பார்வை யாளர்கள் யாரும் சந்திப்பது தற்காலிகமாக தடை செய்யப் பட்டுள்ளது.

வேலூர் பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியை 15 நாட்களுக்கு ஒரு முறை அரைமணி நேரம் சந் தித்துப் பேச அளிக்கப்பட்டிருந்த அனுமதிக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் மத்திய சிறைக்கு முருகனின் தாயார் சோமணி அண்மையில் வந்தார். முரு கனை சந்திக்க அனுமதி அளிக்கு மாறு மனு அளித்தார். இதை பரிசீலனை செய்த சிறை நிர்வாகம் அவரது மனுவை ரத்து செய்தது. இதையடுத்து, சாந்தனை மட்டும் அவர் சந்தித்தார்.

இந்நிலையில், தன்னை சந்திக்க இலங்கையில் இருந்து வந்துள்ள தனது தாயாரின் முதுமையைக் கருத்தில்கொண் டும், அவரது சுற்றுலா விசா இம் மாத இறுதியில் முடிவடை வதாலும் சந்திப்பதற்காக அவர் அளித்த மனுவை பரிசீலிக் கும்படி சிறைத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட கோடை கால அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, முருகனின் தாயார் விசா இம்மாத இறுதியில் முடிவடைய இருப்பதால் அதற்கு முன்னதாக மே 22-ம் தேதி முதல் 27-ம் தேதிக்குள் ஏதாவது ஒருநாள் அரை மணி நேரம் முருகனை சந்தித்துப் பேச அவருக்கு அனுமதி அளிக்கும்படி சிறைத் துறை அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூடுதல் அரசு குற்ற வியல் வழக்கறிஞர் கோவிந்த ராஜ் வாதிடும்போது, “சிறை விதிகளின்படி சிறைச்சாலைக் குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. ஆனால், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி முருகன் வேலூர் மத்திய சிறைக்குள் செல்போன் பயன் படுத்தியுள்ளார். அதனால் சிறை விதிகளின்படி அவர் யாரையும் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையிலேயே அவரது தாயாருக்கும் அனுமதி மறுக் கப்பட்டுள்ளது” என்றார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இலங்கை யில் இருந்து வந்துள்ள தாயார் தன்னைச் சந்திக்க அனுமதிக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்ற முருகனின் கோரிக்கையை ஏற்க மறுத்த துடன், வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்குப் பிறகு தள்ளிவைத்து உத்தர விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்