நாகை அருகே டாஸ்மாக் கடை எரிந்து சேதம்

By செய்திப்பிரிவு

நாகை மாவட்டம் தலைஞாயிறில் டாஸ்மாக் கடை தீப்பற்றியதில், ரூ.12 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து நாசமடைந்தன. இந்த சம்பவத்துக்கு சதிச் செயல் காரணமா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தலைஞாயிறு பேரூராட்சி அலுவல கம் எதிரில், சின்ன சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மேற்பார்வையாளராக செந்தில்குமார் மற்றும் 3 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இக்கடை நேற்று அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றி எரிந்தது. அவ்வழியே சென்ற ஆம்புலன்ஸ் வாகன ஊழியர் கண்ணன், தலைஞாயிறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

பின்னர், டாஸ்மாக் மேலாளர் கண்ணன், மதுவிலக்கு அமல் பிரிவு ஏடிஎஸ்பி தங்கதுரை மற்றும் போலீ ஸார், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான 14,633 மது பாட்டில்கள் எரிந்து சேதமடைந்தது தெரியவந்தது.

மேலும், அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.36 ஆயிரத்தையும் காணவில்லை. அந்தக் கடைக்கு தீ வைக்கப்பட்டதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சுற்றுச்சூழல்

28 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்