கொளத்தூரில் திமுக சார்பில் பொங்கல் விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை கொளத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 3 ஆயிரம் பேருக்கு பொங்கல் பொருள்களை வழங்கினார்.

கொளத்தூர் தொகுதியில் நேற்று பல இடங்களில் திமுக சார்பில் பொங்கல் விழா நடை பெற்றது. இதில் அத்தொகுதியின் எம்.எல்.ஏவும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் 3 ஆயிரம் பேருக்கு அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் என பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருள்களையும், வேட்டி, சேலைகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

எனது தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று ஏழைகளுக்கு உதவி செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் சிறப்புகளை மக்களிடம் விளக்கி பேசினேன்.

சென்னைக்கு கிருஷ்ணா நீரை திறந்துவிட வலியுறுத்தி விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியிருப்பதை வரவேற்கிறேன். இதுபோல பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்யாதது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்