புதுக்கோட்டையில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது- தொடரும் கடத்தல் சம்பவங்களுக்கு காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் நள்ளிரவில் பேருந்தில் கடத்திய 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது. இருவரை கைது செய்தனர்.

அறந்தாங்கி, புதுக்கோட்டை வழியாக தொண்டியிருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சனிக்கிழமை இரவு புறப்பட்டுள்ளது. அந்தப் பேருந்தில் தங்கம் கடத்தப்படுவது குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து தூத்துக்குடி மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினர் சோத னையை தீவிரப்படுத்தினர்.

அதன்படி பேருந்துக்குள் ஒருவரை தகவல் கொடுப்பதற்காக நியமித்துக்கொண்ட புலனாய்வு பிரிவினர் பேருந்துக்கு முன்னும் பின்னும் வாகனங்களில் தொடர்ந்த னர். புதுக்கோட்டை அருகே வாண்டாக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் சுங்கத்துறையினர் பேருந்தை நிறுத்தியுள்ளனர். அப்போது, பேருந்திலிருந்து கையில் ஒரு பையுடன் குதித்து தப்பிக்க முயன்ற இருவரை கைது செய்து அறந்தாங்கி சுங்கத் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இருவரும் 10 கிலோ 200 கிராம் தங்கம் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற் கொண்டுள்ளனர். இது குறித்து புலனாய்வுப் பிரிவினரிடம் கேட்ட போது தகவல் ஏதும் கூறாமல் கைது செய்யப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டுச் சென்று விட்டனர்.

தொடரும் கடத்தல் சம்பவங்கள்…

இதேபோல கடந்த சில நாட்களாக புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட பேருந்தில் 4.6 கிலோ தங்கம், இலங்கையில் இருந்து மதுரைக்கு படகு மூலம் கடத்திவரப்பட்ட 35 கிலோ தங்கம், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 1.750 கிலோ தங்கம், திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் விட்டுச்சென்றிருந்த 2 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தங்கம் கடத்தலுக்கு ஆகாய மார்க்கத்தில் கெடுபிடி அதிகரித்த தால் கடல் வழியாக கடத்தி வந்து இந்திய எல்லையிலிருந்து சாலைப் போக்குவரத்து மூலம் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வ

தாகக் கூறப்படுகிறது. தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை மத்திய அரசு 10 சதமாக உயர்த்திய தால் கடத்துவது அதிகரித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் சுமார் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப் பட்டிருக்குமென சுங்கத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

இந்தியா

6 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

42 mins ago

சினிமா

55 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்