தமிழக அரசை பாஜகதான் வழிநடத்துகிறது: இந்திய கம்யூனிஸ்ட் செயலர் டி.ராஜா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தமிழக அரசை பாஜகதான் வழிநடத்துகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காததைக் கண்டித்து ஜூலை 24, 25, 26 ஆகிய தேதி களில் நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிறைநிறப்பும் போராட்டத்தை நடத்த உள்ளது.

சேலம் உருக்காலை மற்றும் சென்னை துறைமுகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு முனைந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனமான அதானி குழுமம் ஆந்திராவில் தனியார் துறைமுகம் அமைக்கவுள்ளதாகத் தெரிகிறது.

இதிலிருந்து, தனியார் மயத் துக்கு மத்திய அரசு ஆதரவளித்து வருவது தெரிகிறது. இதேபோல ராணுவ தளவாடங்கள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாகும். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும்.

குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, மோடி ஜிஎஸ்டியை எதிர்த்தார். ஆனால், அவரே பிரதமாரான பிறகு ஜிஎஸ்டியை கொண்டு வந்துள்ளார். அரசு, சாமானிய மக்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டுமே தவிர பாதக மாக நடந்துகொள்ளக் கூடாது.

நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தமிழ்நாட்டில் மாநில உரிமைகள் பறிபோகின்றன. தமிழகத்தில் செயல்படும் மாநில அரசை, மத்திய பாஜக அரசுதான் வழிநடத்துகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்