12 மணிநேர பேச்சுக்கு பின் முடிவுக்கு வந்த மதுரை தமுக்கம் போராட்டம்

By செய்திப்பிரிவு

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம் போலீஸாரின் 12 மணி நேர பேச்சுக்கு பின் நேற்று இரவு முடிவுக்கு வந்தது.

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கோரி போராட்டத்தை கைவிட மறுத் தனர். நேற்று காலை தமுக்கத்தில் போலீஸார் நிறுத்தப்பட்டனர். நகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார். கலைந்து செல்ல அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனாலும், நிரந்தர சட்டத்து க்கான உத்தரவு வரும் வரை கலையமாட்டோம் என போராட் டக்காரர்கள் அடம் பிடித்தனர். காலை 10 மணிக்கு மேல் அங்கு கூட்டம் அதிகரிப்பால் தமுக்கம் மெயின் கேட் அருகில் மறியல் நடந்தது. போலீஸாரை உள்ளே விடாமல் அவர்கள் தடுத்து கோஷமிட்டனர். கூடுதல் துணை காவல் ஆணையர் முருகேஷ், மைக் மூலம் மாணவர்களை எச்சரித்தார்.

அப்போது, அவர், மதுரை போராட்டக் களத்து க்குள் மாணவர் அல்லாத சில அமைப்புகள் புகுந்துள்ளன. மாணவர்களை சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கின்றன.தயவுகூர்ந்து மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். மேலும், கூட்டத்துக்குள் உங்களோடு அந்த அமைப்பினரும் அமர்ந்து இருப் பதாகவும் அவர் அடையாளம் காட்டியும் மாணவர்கள் களைய மறுத்தனர். வேறு வழியின்றி போக்குவரத்து இடை யூறு இன்றி, ரோட்டில் ஒரு பகுதியில் மட்டும் அமர்ந்து போராடுங்கள். போக்குவரத்துக்கு வழிவிடுமாறு தொடர்ந்து எச்சரித்தும் எழவில்லை. போக்குவரத்து துணை ஆணையர் ஏ.ஜி.பாபுவும் எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை.

தமிழகத்தில் பல்வேறு இடங் களில் போராட்டம் முடிவுக்கு வந்ததாக தெரிவித்தும், போராட்டக்காரர்கள் அசரவில்லை. தமுக்கத்தில் தொட ர்ந்து பதற்றமான சூழலால் போலீஸார் சுற்றி வளைத்து நின்றனர். எந்த நேரமும் தடியடி நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தேவர் சிலை, தந்தி அலுவலகம், காந்தி மியூசியம் பகுதி வழியாக யாரும் உள்ளே வராமல் தடுக்க, போலீஸார் தடுப்பு வேலிகளால் தடுத்தனர். இருப்பினும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் வருகையால் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது.

இந்நிலையில், மதியத்திற்கு மேல் போராட்டக்குழுவைச் சேர்ந்த 4 பேரை அழைத்து காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். ஜல்லிக்கட்டுக்கான நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர். நிரந்தர சட்டத்துக்கான ஒப்புதல் நகலை வழங்கினால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். நகல் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இருப்பினும், மாலை 5 மணி வரை போராட்டக்காரர்கள் போக மறுத்தனர். அவர்கள் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தை தொடர் ந்தனர். இதனால் தொடர்ந்து பதற்றமான நிலை நீடித்தது. ஏராளமான போலீஸார் நிறுத்தப் பட்டனர்.

இறுதிகட்டமாக 6 மணிக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதை யடுத்து அவர்களை கைது செய்ய போலீஸார் தயாராகினர். 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளை அவுட் போஸ்ட் பக்கம் நிறுத்தி இருந்தனர். இதையறிந்ததும் சிலர் கலைந்து சென்றனர். இறுதியாக 100-க்கும் மேற்பட்டோர் மட்டும் ரோட்டில் அமர்ந்தனர். அவர்களிடம் துணை ஆணையர் ஏஜி.பாபு இறுதிக்கட்ட பேச்சு நடத்தினார். இதிலும், அவர்கள் கலையாததால் போலீஸார் போராட்டக் காரர்களை சுற்றி வளைத்தனர். 7.30 மணிக்கு காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் வந்தார். அவர் கலைந்து போக வலியுறுத்தினார். அதற்கு மறுத்ததால் போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து, வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அவுட்போஸ்ட் பக்கமாக சென்ற சிலர், போராட்டக்காரர்களை கைது செய்யும் பட்சத்தில் அவர்களை ஏற்றுவதற்காக தயாராக நிறுத்தி இருந்த 6-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை கல்வீசி சேதப்படுத்தினர். அப்போது, போலீஸார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். நந்தினி என்ற சட்டக்கல்லூரி மாணவி உட்பட சிலரை போலீஸார் பிடித்து சென்றனர்.

சுமார் 12 மணி நேர பேச்சுவார்த்தைக்குப்பின், போராட்டம் முடிவு வந்தது. 6 நாளுக்குப் பின், கோரிப்பாளையம் வழியாக நேற்று இரவு 8 மணிக்குத்தான் போக்குவரத்து சீரானது. இதனிடையே மதுரை செல்லூர் மேம்பாலத்தில் சிறைபிடித்த கோவை ரயிலை மீட்டபோது, போராட்டக்காரர்கள் கல்வீச்சில் போலீஸ்காரர் காயம் அடைந்தார். காவல் ஆணையர் கூறுகையில், மதுரை போராட்டக்காரர்களிடம் தொடர்ந்து பேச்சு நடத்தி கலைத்தோம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு போதிய பாது காப்பு அளிக்கப்படும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்