கல் குவாரிகளில் உள்ள நீரை குடிநீராக பயன்படுத்தலாமா? - சென்னை குடிநீர் வாரியம் ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருக்கும் நீரை குடிநீராக பயன்படுத்தலாமா என்பது குறித்து சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை சென்னை மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த முடியுமா என பல்வேறு ஆய்வுகளை மேற் கொள்ள சென்னை குடிநீர் வாரிய பொறியாளர்களுக்கு, வாரியத்தின் இயக்குநர் வி.அருண்ராய் அறி வுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து, கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை குடி நீராக பயன்படுத்த முடியுமா என்பது குறித்தும், குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரின் இருப்பு குறித்தும் பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை புறநகரில், மாங்காடு பகுதியில் 22 குவாரிகளும், திருநீர்மலையில் 3 குவாரிகளும், பம்மலில் 3 குவாரிகளும் இருப் பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த குவாரிகளில் உள்ள நீரின் தரம் மற்றும் அளவீடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் நீரின் தரம் குறித்து கிங் இன்ஸ்டிட்யூட் மற்றும் அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் புவி அமைப்பியல் துறையும், நீர் இருப்பு குறித்து எம்ஜிஆர் பொறியியல் கல்லூரி சிவில் பொறியியல் துறையும் ஆய்வு செய்து வருகின்றன. இந்த நீர் பயன்பாட்டுக்கு உகந்தது என கண்டறியப்பட்டால், கோடையை சமாளிக்கும் விதத்தில் அவற்றை பயன்படுத்திக்கொள்ள குடிநீர் வாரியம் முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

32 mins ago

உலகம்

30 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

43 mins ago

சினிமா

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்