பரோலில் சென்று தலைமறைவானவர் 17 ஆண்டுகளுக்கு பிறகு கைது

தந்தை, பாட்டியை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனைக் கைதி 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அடையபுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர், வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், அவரது தந்தை வேல் முருகன் மற்றும் பாட்டி கண்ணம் மாள் ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சேகர், கடந்த 1994-ம் ஆண்டு வேல் முருகன், கண்ணம்மாள் ஆகியோர் மீது கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து, சேகரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவண்ணா மலை அமர்வு நீதிமன்றம், கடந்த 1996-ம் ஆண்டு சேகருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது மனைவி சாந்தியை சந்திப் பதற்காக கடந்த 11-12-1999 அன்று 5 நாள் பரோலில் வந்த சேகர், அதன் பிறகு தலை மறைவாகி விட்டார். இந்நிலையில், வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த கரச மங்கலம் கிராமம் பாரதி நகரில், 17 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த சேகரை(60), வேலூர் போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்