வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் சேவை கட்டணம் எங்களை வந்து சேர்வதில்லை: ஹோட்டல் பணியாளர்கள் வேதனை

By செய்திப்பிரிவு

வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் சேவை கட்டணத்தை பெரும்பாலான ஹோட்டல் உரிமை யாளர்கள், தங்களுக்கு பகிர்ந்து அளிப் பதில்லை என்று ஹோட்டல் பணி யாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெரிய ஹோட்டல்களுக்குச் சென்று நாம் சாப்பிட்ட பிறகு அளிக்கப்படும் பில்லில் சாப்பாட்டுக்கான கட்டணத் துடன் சேர்த்து வாட் வரி, சேவை வரி (service tax), சேவை கட்டணம் (service charge) என்று பல்வேறு கட்டணங்களை வசூலிக்கின்றனர். குறிப்பாக, ஏ.சி. வசதி கொண்ட ஹோட்டல்கள் விதிக் கும் கட்டணங்களில் மக்களுக்கு குழப்பங்கள் உள்ளன. எனினும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், இதுபற்றி கேள்வி ஏதும் கேட்காமல், கேட்ட பணத்தை செலுத்திவிட்டு வந்துவிடுவார்கள்.

இதில், வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்படும் சேவை வரி மற்றும் வாட் வரி ஆகியவை மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்தப்படுகிறது. சேவை கட்டணம் என்பது முழுக்க முழுக்க ஹோட்டலுக்குத்தான் போய்ச் சேரும். நாம் சேவைக் கட்டணத்தை செலுத்தினால் சர்வருக்கு டிப்ஸ் தர வேண்டிய அவசியமில்லை. எனவே, ஹோட்டல்களில் வசூலிக்கப்படும் சேவை வரிக்கும், சேவை கட்டணத் துக்குமான வித்தியாசத்தை பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்டாயம் அல்ல

இதுதொடர்பாக சமீபத்தில் விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு ‘‘ஹோட் டல்களில் சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. விருப் பப்பட்டால் மட்டும் வாடிக்கையாளர்கள் இந்தக் கட்டணத்தை கொடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சேவை என்பது உணவின் தரமா, சுகாதாரமா, வசதிகளா என்பது குறித்து அரசிடம் தெளிவான விளக்கம் இல்லை.

இதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் செயலாளர் சீனிவாசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பெரிய ஆடம்பர ஹோட்டல்களில் சேவை கட்டணம் வசூலிக்கின்றனர். அவ்வாறு, சேவை கட்டணம் வசூலித் தால் முன்கூட்டியே வாடிக்கையாள ருக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தாமல் சேவை கட்டணம் வசூலிப்பது தவறு. மத்திய அரசு விதிப்பது சேவை வரியாகும். ஏ.சி. வசதி கொண்ட ஓட்டல்களில் மட்டும், மொத்த பில் தொகையில் 40 சதவீத தொகைக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது. மாநிலத்தில் விற்கப்படும் பொருட்கள் மீது மாநில அரசு வாட் வரி விதிக்கிறது. சாதாரண ஹோட்டல்களில் மொத்த பில் தொகையில் 2 சதவீதமும், நட்சத்திர ஹோட்டல்களைப் பொருத்தவரை மொத்த பில் தொகையில் 14.5 சதவீத தொகையும் வாட் வரியாக வசூலிக்கப் படுகிறது.

ஏ.சி. வசதி இல்லாத ஹோட்டல்களில் சாப்பிட்டால் வாட் வரி மட்டும் வசூலிக்கப்படும். ஏ.சி. ஹோட்டல்களில் சேவை வரி, வாட் வரி ஆகிய இரண்டும் வசூலிக்கப்படும்.

டிப்ஸ்க்கு பதில் சேவை கட்டணம்

பெரிய ஹோட்டல்களுக்கு உண வருந்த செல்பவர்கள் தற்போது டிப்ஸ் அளிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த தொகை உணவை பரிமாறுபவருக்கு மட்டும் செல்கிறது. ஆனால், உணவை தயாரிப்பது முதல் ஹோட்டலை சுத்தம் செய்வது வரை பலரின் உழைப்பும் சேவையில் அடங்கியுள்ளது. எனவே தான், டிப்ஸ்க்குப் பதில் வாடிக்கை யாளர்களிடம் இருந்து சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம், ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

ஹோட்டல் வழங்கும் சேவை திருப்தி அளிக்கவில்லை என்றால் சேவை கட்டணத்தை அளிக்க வேண்டியதில்லை என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு முரண்பாடாக ஹோட்டலில் ஒரு டன் ஏ.சி பொருத்தப்பட்டிருந்தாலும் அதற்கு அரசு சேவை வரி விதிக்கிறது. அதனை வாடிக்கையாளர்கள் கட்டாயம் கொடுக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சேவை கட்டணத்தை வாடிக்கை யாளர் செலுத்தாமல் மறுக்க முடியுமா என கேட்டதற்கு, ‘‘அந்த கட்டணம் விருப்பத்துக்கு உட்பட்டது என்பதால் அதனை அளிக்க முடியாது என வாடிக்கையாளர் மறுக்கலாம்” என்றார்.

சேவை கட்டணம் குறித்து ஹோட்டல் துறை சார்ந்த சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

எஸ்.ராஜேஷ்வரன் (தனியார் நட்சத்திர ஹோட்டல் ஊழியர், கோவை):

வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூ லிக்கப்படும் சேவை கட்டணம் ஹோட்டல் ஊழியர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான ஹோட்டல்களில் அந்த கட்டணத்தை பகிர்ந்து அளிப்பதில்லை. எனது 9 ஆண்டு கால பணி அனுபவத்தில், ஒரே ஒரு ஹோட்டலில் மட்டுமே சேவை கட்டணத்தை பகிர்ந்து அளித்துள்ளனர்.

செல்லையா (தனியார் ஹோட்டல் சர்வர், திருச்சி):

வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் சேவை கட்டணம், எங்களுக்கானது என்ற விவரம்கூட இதுவரை எனக்கு தெரியாது. அப்படி வசூலான தொகையை ஹோட்டல் நிர் வாகம், இதுவரை எங்களுக்கு வழங்கிய தில்லை. நாங்களும் கேட்டதில்லை. ஒருவேளை கேட்டால், உடனே வேலையை விட்டு நிறுத்திவிடுவார்கள். அதன்பின் வயதான காலத்தில், குடும் பத்தை ஓட்டவே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

ஜெ. பிரபாகரன் (ஹோட்டல் ஊழியர், திருநெல்வேலி):

இங்குள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்கள் விரும்பித் தரும் தொகையை ஊழியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். எங்களது சேவையில் திருப்தி இல்லாவிட்டால் வாடிக்கை யாளர்கள் சேவை கட்டணத்தை ரத்து செய்ய சொல்வார்கள். அதை நாங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

டெம்பிள் சிட்டி கே.எல்.குமார் (மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்க மாவட்டத் தலைவர்):

தென் தமிழகத்தில் இருக்கும் நடுத்தர ஹோட்டல்களில் சேவை கட்டணத்தை அமல்படுத்த முடியாது. மக்களும் ஏற்றுக் கொள்ள மாட் டார்கள். மேலும், ஹோட்டல்களில் சேவை கட்டணத்தை வசூல் செய்வது தவறு.

கோபாலகிருஷ்ணன் (தனியார் ரெஸ்டாரண்ட் ஊழியர், மதுரை):

வாடிக்கையாளர்கள் விரும்பி கொடுக் கும் ‘டிப்ஸை’ நாங்கள் வாங்கிக் கொள் கிறோம். ‘டிப்ஸ்’க்காக யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. 90 சதவீதம் பேர் டிப்ஸ் தந்துவிடுகின்றனர். தற்போது, சம்பளத்தைவிட டிப்ஸ்தான் முக்கிய வருமானமாக இருக்கிறது.

முத்துக்கிருஷ்ணன் (ஹோட்டல் மேலாளர், சேலம்):

எங்கள் ஹோட் டல்களில் வாடிக்கையாளர்களுக்கு செய்து தரும் வசதிக்கு ஏற்ப சேவை கட்டணம் வசூலிக்கிறோம். சர்வர் களுக்கு ‘டிப்ஸ்’ கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஆனால், வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு கொடுப்பதை தவிர்க்க முடியாது.

பழனியப்பன் (சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர்)

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 7,500 ஹோட்டல்கள் உள்ளன. இதில், 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சில ஹோட்டல்களில் வழங்கப்படும் சேவைக்கு 20 சதவீதம் வரை சேவை கட்டணம் வசூலிக்கின்றனர். சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வாடிக்கையாளர்களின் விருப்பம். இதில் நாங்கள் தலையிடுவதில்லை.

சேலத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, “ஹோட்டல் நிர்வாகத்தினர் பில்லில் சேவைக் கட்டணத்தை குறிப்பிட்டு வசூலிக்கும்போது, இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது அநாகரிகம் என்று கருதி பலரும் பணம் கொடுத்துவிட்டு செல்கின்றனர். ஆனால், இந்த சேவைக் கட்டணத்தில் இருந்து பணியாளர்களுக்கு பங்கு கொடுக்கப்படுவதில்லை. இந்நிலையில், சர்வர்கள் மற்றும் செக்யூரிட்டிகளுக்கு ‘டிப்ஸ்’ கொடுக்காமல் தவிர்ப்பதை அநாகரிகம் என்றே வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். அதனால், ஹோட்டல் களுக்கு செல்பவர்கள், கட்டாயம் சர்வர் டிப்ஸ், செக்யூரிட்டி டிப்ஸ் கொடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளனர்” என்றார்.

கோவை, திருப்பூரில் உள்ள ஹோட் டல்களில் பணியாற்றும் சர்வர்கள் சிலர் கூறும்போது, “ஹோட்டல் தொழிலாளர் களுக்கு தனி சங்கம் எதுவுமில்லை. இதனால், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல்தான் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. பெரிய ஹோட்டல்களில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பணிபுரிகின்றனர். காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை பார்க்கிறார்கள். குறைந்த ஊதியத்தில், கொத்தடிமைபோல வேலைபார்க்கும் சூழல்தான் நிலவுகிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்