மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்ப பின்னணி: உருக்கமான தகவல்கள்

By செய்திப்பிரிவு

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் சிண்டகுபா அருகில் உள்ள கலாபதர் வனப் பகுதியில் நேற்று முன்தினம் மாவோயிஸ்ட் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் கள் 25 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த 4 தமிழக வீரர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்:

திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் காமராஜ் காலனியைச் சேர்ந்த நாராயணன் மகன் செந்தில்குமார்(35). மத்திய ரிசர்வ் படை காவலராக சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 74-வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2000-ம் ஆண்டில் மத்திய ரிசர்வ் படையில் பணியில் சேர்ந்தார்.

உயிரிழந்த செந்தில்குமாரின் தந்தை மறைந்த நாராயணன், பொதுப்பணித் துறையில் லஸ்க ராக பணியாற்றியவர். தாய் அமிர்த வள்ளி(68). செந்தில்குமாரின் மனைவி வித்யா, மகன் சக்தி பிரியனுடன்(8) கோவையில் வசித்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கை மானை அடுத்த அவிச்சாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்ம நாபன்(44). இவர் கடந்த 1994-ம் ஆண்டு சிஆர்பிஎப் படை வீரராக பணியில் சேர்ந்தார். சத்தீஸ்கர் மாநிலம் 90-வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார்.

இவரது தந்தை முருகேசன், விவசாயி. தாய் ராஜேஸ்வரி. பத்மநாபனுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், முரளிதரன்(5), மோனிகா(2) ஆகிய குழந்தை களும் உள்ளனர். வரும் ஜூன் 1-ம் தேதி இவர் பணியிலிருந்து ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள முத்துநாகையா புரம் கிராமத்தைச் சேர்ந்த முன் னாள் ராணுவ வீரர் பிச்சை அழகு-ராக்கம்மாள் தம்பதியின் மூத்த மகன் அழகு பாண்டி(29). பட்டப்படிப்பு முடித்த இவர், சிஆர்பிஎப் வீரராக 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்த இவர், கடைசியாக சத்தீஸ்கரில் பணியில் இருந்தபோது, நேற்று முன்தினம் நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்கு தலில் உயிரிழந்தார்.

இவருக்கு திருமணம் ஆக வில்லை. சத்யா, நித்யா ஆகிய 2 சகோதரிகளும், பவித்ரன் என்ற தம்பியும் உள்ளனர். அழகு பாண்டிக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடு களை செய்துவந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி-பவுனாம்பாள் தம்பதியின் மகன் திருமுருகன்(36). இவரது மனைவி செல்வி(28). மகள்கள் பிரதீபா(11), பிரிய தர்ஷினி(10), மகன் கரன்(5). திருமுருகன் பிஎஸ்சி முதலா மாண்டு படிக்கும்போது, சிஆர்பிஎப் பணியில் சேர்ந்தார். டெல்லி, மும்பை, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 3 ஆண்டாக கோவையில் குடியிருந் தார். கடந்த மார்ச் 25-ம் தேதி இடமாறுதலாகி சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியில் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஒரு மாதத்தில், இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

தலைவர்கள் இரங்கல்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

சத்தீஸ்கர் மாநி லம் சுக்மாவில் நடைபெற்ற தாக்குதலில் 25 சிஆர்பிஎப் வீரர் கள் கொல்லப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந் தேன். நாட்டின் பாதுகாப்புக்காக இன்னுயிர் ஈந்த வீரர்களின் குடும் பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்:

தாக்குதலில் வீர மரணமடைந்த சிஆர்பிஎப் வீரர் களுக்கு வீர வணக்கம். இத்தாக்கு தலில் காயமடைந்தவர்கள் விரை வில் குணமடைய பிரார்த் திக்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்:

மாவோயிஸ்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக போராடி தாக்குதல் நடத்திய தமி ழகத்தைச் சேர்ந்த அழகுபாண்டி, செந்தில்குமார், திருமுருகன், பத்மநாபன் ஆகியோர் வீர மரணம் அடைந்துள்ள செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த அனை வரின் குடும்பத் தினருக்கும் எனது ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள் கிறேன்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:

சிஆர்பிஎப் வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர்களது குடும் பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் அனைவரும் நாட்டுக்காக இன்னு யிரை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரது குடும்பத் துக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்