சுவாதி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை கோரும் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

சுவாதி கொலை வழக்கு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி, ராம்குமாரின் தாயார் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

இளம் பெண் சுவாதி கடந்த ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்பாவியான தன் மகன் ராம் குமாரை போலீஸார் கைது செய் துள்ளதாகவும், சிபிஐ விசார ணைக்கு உத்தரவிடக் கோரியும் ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமராஜ், ‘‘ சுவாதி கொலை வழக்கை போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை. உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக ராம்குமாரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே இந்த கொலைக்குப் பின்னால் உள்ள பல உண்மை வெளியே வரும்’’ என வாதிட்டார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எமிலியாஸ், ‘‘இந்த வழக்கிற்கு பதில்மனு தாக்கல் செய்ய விரும்பவில்லை. அதற்கு பதிலாக சுவாதி கொலை வழக்கில் போலீஸார் நடத்திய அனைத்து விசாரணை அறிக்கை களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம். அதன்பிறகு இந்த நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரட் டும்’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்