நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி மனு

By செய்திப்பிரிவு

சட்டப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை யிலான அணியினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடந்த நம் பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த நிகழ்வுகள் தொடர்பாக, ஓ.பன்னீர்செல் வம் மற்றும் 10 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடி வெடுத்தனர். இதன்படி, கே.பாண்டிய ராஜன் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தை, செல்லாதது என அறிவிக்க வேண்டும். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வைக்கப்பட்ட வேண்டுகோளை பேரவைத் தலைவர் நிராகரித்திருக்க கூடாது என்ற அடிப்படையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு வழியாக புதிய நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளதாக, பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அணியின் செய்தி தொடர்பாளர் கே.பாண்டியராஜன் கூறியதாவது:

தமிழக அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேரவைத் தலைவர் விதிகளை மீறி செயல்பட்டுள்ளார். அவர் இருமுறை பேரவையை ஒத்தி வைத்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்தியது, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காதது, ஆளுநரிடம் உறுதியளித்தபடி பதவியேற்புக்குப் பின்னரும் எம்எல்ஏக்களை வெளியில் விடாதது என 26 விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன.

அதற்கான அடிப்படை ஆதாரங் களை உச்ச நீதிமன்றத்தில் அளித் துள்ளோம். வெகுவிரைவில் தீர்ப் புக்கு கொண்டு வரும் வகையில் வழக்கை பதிவு செய்துள்ளோம் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். ஆர்.கே.நகர் வேட்பாளர் தொடர் பாக கட்சியின் மூத்த நிர்வாகி கள் கலந்தாலோசித்துக் கொண் டிருக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை (நாளை) நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் அறி விப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பாளர் யார்?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம், நேற்று தன் வீட்டில் ஆலோசனை நடத்தினார். இதில், மதுசூதனன், பொன்னையன், கே.பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்