ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு டீன் நியமனம்: அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

அண்ணாசாலை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு டீன் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறுவது தொடர்பாக திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாகாந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் எம்சிஐ அதிகாரிகள் குழு விரை வில் ஆய்வு செய்ய உள்ளது.

சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அருகிலேயே அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 2015-16-ம் ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் செயல்பட அனுமதி வழங்ககோரி, இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் (எம்சிஐ) தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூர்பா காந்தி தாய் - சேய் நல மருத்துவமனையின் (கோஷா மருத்துவமனை) கீழ், இந்த புதிய அரசு மருத்துவக் கல்லூரி செயல்படவுள்ளது. மகப்பேறு மருத்துவமனையாக செயல்பட்டு வருகின்ற அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை, அடுத்த ஆண்டு முதல் அரசு பொது மருத்துவமனையாக செயல்பட உள்ளது.

இந்த மருத்துவமனையை, அரசு பொது மருத்துவமனையாக மாற்றும் பணிகள் வேகமாக நடை பெற்று வருகின்றன. இந்நிலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி யில் முதல்வராகப் பணியாற்றி வந்த டாக்டர் சாந்திமலர் என்பவர் மாற்றப்பட்டு, சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வராக நியமிக்கப்பட் டுள்ளார்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக இந்த மருத்துவமனையில் கூடுதலாக துறைகள், படுக்கை வசதிகளுடன் வார்டுகள், அறுவை சிகிச்சை அரங்குகள் போன்றவை கட்டப் பட்டுள்ளன.

மேலும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்களும் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர். மருத்துவ உபகரணங்களும் வாங்கப்பட உள்ளன. தற்போது மருத்துவ மனையில் உள்நோயாளிகளாக 600 பேர் சிகிச்சைப் பெற்று வரு கின்றனர். மேலும் தினமும் புறநோயாளிகளாக 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர்.

அரசு பொது மருத்துவமனை யாக மாற்றப்பட்டால், நோயாளி களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையை எம்சிஐ அதிகாரிகள் விரைவில் வந்து ஆய்வு செய்ய உள்ளனர். எம்சிஐ அனுமதி கிடைத்தால், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

28 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

50 mins ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்