தனியார் உர விற்பனையாளர்கள் பதுக்கலில் ஈடுபடுகிறார்கள்: வைகோ குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்பதற்காக தனியார் உர விற்பனையாளர்கள் பதுக் கலில் ஈடுபட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள் ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை நன்கு பெய்து அணைகளில் போதுமான அளவு நீர் நிரம்பியுள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், ரசாயன உரம் மற்றும் யூரியா தட்டுப்பாட்டால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் யூரியா 50 கிலோ மூட்டை 270 ரூபாய்க்கும், டி.ஏ.பி 1125 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

உரத்தட்டுப்பாடு

ஆனால் இந்த ஆண்டு வேளாண்மை கூட்டுறவு மையங்களில் உரங்கள் போதிய அளவில் இருப்பு இல்லை. உரத்தட்டுப்பாடு காரணமாக தனியார் உர நிறுவனங்களை விவசாயி கள் நாடுகின்றனர். ஆனால் அவை அதிக விலைக்கு உரங்களை விற்று விவசாயிகளை கொள்ளையடிக்கின் றன.

மேலும் தனியார் உர விற்பனை யாளர்கள், உர மூட்டைகளை பதுக்கி வைப்பதால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

விவசாயிகளின் தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்திய அரசின் உரக்கொள்கையும் ஒரு காரணம். யூரியா தயாரிக்க தேவையான ‘நாஃப்தா’வை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சலுகை விலையில் உரத் தொழிற்சாலைகளுக்கு வழங்கி வந்தது. பா.ஜ.க அரசு பதவி ஏற்ற பின்னர் இது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல உரத் தொழிற்சாலைகளில் யூரியா உற்பத்தி நின்றுவிட்டது.

இதன் காரணமாக நாடு முழுவதும் உரத்தட்டுப்பாடு ஏற்படுவது மட்டுமின்றி, மத்திய அரசின் உர மானியம் வெட்டப்படுவதால் ரசாயன உரங்கள், யூரியா போன்றவற் றின் விலைகளும் தாறுமாறாக உயர்ந் துள்ளன. இதனால் விவசாயிகள் அல்லல்படும் அவல நிலைக்கு தள்ளப்படுவர்.

நாட்டின் முதுகெலும் பான வேளாண்மைத் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்து, உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்