கர்நாடகா, கேரளாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு: உயர் நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் உறுதி

By செய்திப்பிரிவு

கர்நாடகா, கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாது காப்பு வழங்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை பொதுநல வழக்கு மைய ஒருங்கிணைப்பாளர், உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த பொதுநல மனுவில், “காவிரி நீர் திறக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழர்கள் உயிருக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

பொள்ளாச்சி அருகே பரம்பிக் குளம் பகுதியில் தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் மற் றும் மாணவர்களை கேரள காவல்துறையினர் தாக்கியுள்ள னர். கர்நாடகா, கேரளாவில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். இரு மாநிலங்களிலும் தமிழர்களுக் கும், அவர்களின் சொத்துகளுக்கும் பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகள், “இரு மாநிலங்களில் வாழும் தமிழர் களின் பாதுகாப்புக்காக மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “இரு மாநிலங் களில் வாழும் தமிழர்களை பாது காக்க தமிழக அரசு உரிய நட வடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடகாவில் வாழும் தமிழர் களின் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது” என்றார். மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “இரு மாநிலங்களிலும் தமிழர் களை பாதுகாக்க அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள் ளன. கர்நாடகாவில் துணை ராணு வத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது” என்றார். இதையடுத்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்