வன்முறையில் ஈடுபட்டதாக சென்னையில் 170 பேர் கைது: 500 பேரை தேடுகிறது போலீஸ்

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட் டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக 170 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் நேற்று நடந்த வன்முறையில் 108 மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. காவல் துறைக்கு சொந்தமான 57 வாகனங்களும், தீயணைப்பு துறைக்கு சொந்தமான 4 வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மேலும், சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த 45-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன் முறையில் ஈடுபட்டதாக 170 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் 28 பேர் எம்.கே.பி.நகரை சேர்ந்தவர்கள்.

கைதானவர்களிடம் இருந்து பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வன்முறை யில் ஈடுபட அவர்கள் தயாராக இருந்தது தெரியவந்துள்ளது. எனவே, வன்முறையை செய்யச் சொன்னது யார் என்பது குறித்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறையில் போராட்டக்காரர்கள் உட்பட 63 பேர் காயம் அடைந்தனர். போலீஸார் 97 பேர் காயம் அடைந் தனர். வன்முறை சம்பவங்கள் நடந்தபோது அந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், செல்போன்களில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சுமார் 500 பேரை அடையாளம் கண்டுபிடித்து பட்டிய லிட்டு இருப்பதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய இருப்ப தாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, ‘‘சென்னையில் சகஜமான நிலைமை வந்து விட்டது. சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்’’ என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

2 mins ago

தமிழகம்

27 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்