ஆட்டோ கட்டண விழிப்புணர்வு பிரசுரம் வெளியீடு

By செய்திப்பிரிவு

மீட்டர் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நேற்று போக்கு வரத்து காவல் துணை ஆணையர் கள் பன்னீர் செல்வம், மகேஷ் குமார் ஆகியோர் தலைமையில், அனைத்து ஆட்டோ சங்க நிர்வாகி கள் மற்றும் உறுப்பினர்கள் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. துணை ஆணையர்கள் பன்னீர்செல்வம், மகேஷ்குமார் ஆகியோர் விழிப் புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், புதிய திருத்தப்பட்ட மீட்டர்களை பயன்படுத்தி ஆட்டோக்களை ஓட்டவும், நிர்ணயிக்கப்பட்ட மீட்டர் கட்டணங்களையே பொது மக்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும், போக்குவரத்து விதிமீறல் கள் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டவும் அறிவுரைகள் வழங்கப் பட்டன. மேலும், பொது மக்களும் புதிய கட்டணப்படி அமைக்கப்பட்ட மீட்டர் கட்டணங்களையே கொடுக்க வேண்டும் எனவும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் ஆட்டோ எண்களை போக்கு வரத்து போலீஸாருக்கு 9003130103, 7418503430 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப் பட்டது.

வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் 50 இடங்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்