இளைஞர்கள் போராட்டத்தை மார்ச் 31 வரை தள்ளிவைக்க ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மார்ச் 31 வரை இளைஞர்கள் போராட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தடை நிரந்தரமாக நீங்கவில்லை என்றால் தேவைப்படும் பட்சத்தில் போராடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

இதில் ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, வழக்கறிஞர் அம்பலத்தரசு, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி, வீர விளையாட்டு மீட்புக் கழகத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசினர்.

ராஜசேகரன் பேசியதாவது:

''ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 90% வெற்றியை நோக்கி பயணித்து விட்டோம். ஜல்லிக்கட்டு நடைபெறும் போது பல கிராமங்களில் பாதுகாப்பு வளையங்களுக்கான செலவை ஏற்க முடியவில்லை. மாணவர்கள், இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு வளையங்களுக்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும். இதை கோரிக்கையாக முன்வைக்கிறோம் என்றார்.

கார்த்திகேய சிவசேனாபதி பேசியதாவது:

டெல்லி சென்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தோம். அவருடன் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து ஒரு விண்ணப்பம் வைத்தோம். 'பீட்டாவை விசாரிக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து பணம் வருவதை பெற்றுக்கொண்டு, இந்திய நாட்டில் இருக்கும் காளைகளை அழிக்கும் முயற்சியில் பீட்டா செயல்படுகிறது என்று கூறினோம்'.

உள்துறை அமைச்சர் அதுகுறித்து புகார் கொடுக்க கூறியிருந்தார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மேற்கொள்ளலாம்.

இந்தநிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தை மார்ச் 31-ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம். இன்று இப்போது போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருப்பது மாணவர்கள், இளைஞர்களுக்கு சிரமம்தான். அதனால் போராட்டத்தை தள்ளிவைக்க வேண்டுகிறோம்.

2 மாதங்கள் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். தடை நிரந்தரமாக நீங்கவில்லை என்றால் தேவைப்படும் பட்சத்தில் போராடலாம்.

அலங்காநல்லூரில் மட்டும் காவல்துறை அனுமதியின் பேரில் போராட்டம் நடத்தினோம். மெரினா, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் தான் போராடினார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு யாரும் தலைவர் இல்லை. அதனால் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூற எங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே, போராட்டத்தை தள்ளிவைக்க வேண்டுகிறோம்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசியதாவது:

''ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். ஆனால், ஒரு படத்தைப் போட்டு கட்சியைத் திட்டியோ, பிரதமரைத் திட்டியோ வாசகங்கள் வருகின்றன. அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட முடியாது. இந்தப் போராட்டம் தற்போது வெற்றி பெற்று விட்டதால் அதிலிருந்து விலகுகிறேன்'' என்று ஆதி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

7 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்