உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2-வது நாளில் 6,433 பேர் வேட்புமனு தாக்கல்: மொத்தம் 11,181 மனுக்கள் குவிந்தன

By செய்திப்பிரிவு

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 2-வது நாளான நேற்று 6,433 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 2 நாட்களில் இதுவரை 11,181 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில், மாநகராட்சி உறுப்பினர்கள் 2 பேர் உட்பட 4,748 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் 2-வது நாளான நேற்று, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 845, ஒன்றிய கவுன்சில் வார்டு உறுப்பினருக்கு 251, கிராம பஞ்சாயத்து தலைவ ருக்கு 200, கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு 4,134 பேர் மனு தாக்கல் செய்தனர்.

நகர்ப்புறங்களில் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 977 பேர், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 6 பேர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 20 பேர் என மொத்தம் 6,433 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் 11,181 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 224 பேர் மனு

சென்னை உட்பட 12 மாநகராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

நேற்று மாலை நிலவரப்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு 224 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், அதிமுக சார்பில் வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள் என 220 பேரும், 130, 133, 134, 135 ஆகிய 4 வார்டுகளில் 4 சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு னு தாக்கல் செய்தனர். 49, 51, 52, 53, 77, 119, 141 ஆகிய 7 வார்டுகளில் நேற்று மாலை வரை ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்