பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

By செய்திப்பிரிவு

பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து நாளை (நவம்பர் 1) முதல் தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளபாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 1.11.2014 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் திருநெல்வேலி வட்டங்களிலுள்ள 18,090 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்