போலீஸாரை வெட்டிவிட்டு தப்ப முயற்சி: பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் பலி- தொண்டி அருகே நள்ளிரவில் பரபரப்பு

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயற்சி செய்த பிரபல ரவுடி, தற்காப்புக்காக போலீஸார் சுட்டதில் உயிரிழந்தார்.

தொண்டி அருகே உள்ள உசிலணக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கோவிந் தன்(42). இவருக்கு மனைவி பவானி, 3 மகள்கள் உள்ளனர். நிலு வையில் உள்ள சில வழக்குகளில் இவர் விசாரணைக்கு ஆஜராகா மல் இருந்துள்ளார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸார் இவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு தொண்டியை அடுத்து உள்ள தினையத்தூர் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் கோவிந்தன் உயிரிழந்தார்.

இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண் ணன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கோவிந்தன் மீது கொலை, கொலை முயற்சி உட் பட 12 வழக்குகள் உள்ளன. சங்கு வியாபாரி காசிநாதன் என்பவருக் குச் சொந்தமான ரூ.9 லட்சத்தை கீழக்கரையில் இருந்து தொண் டிக்கு அவரது கார் ஓட்டுநர் துல்கருணை கடந்த 11-ம் தேதி கொண்டுசென்றுள்ளார். ஓட்டுநர் துல்கருணை, கோவிந்தனுடன் கூட்டு சேர்ந்து இப்பணத்தை கொள் ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து கோவிந்தனுக்கு ஏற் கெனவே தகவல் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து காரில் வந்த கோவிந்தன், ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஈசிஆர் பாலம் அருகே வழிமறித்து ரூ.9 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளார். இதில் துல்கருணைக்கு ரூ.80 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், துல்கருணை தனக்கு கூடுதல் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். கோவிந்தன் ரூ.60 ஆயிரத்தை தனது நண்பர் சின்னராசு என்பவர் மூலம் துல்கருணைக்கு கொடுத்து அனுப்பி உள்ளார். அதை வாங்க துல்கருணை காரில் சென்றார்.

இதை அறிந்த தனிப்படை போலீ ஸார் நள்ளிரவில் தினையத்தூர் அருகே சின்னராசு, துல்கருணை ஆகியோரைப் பிடித்து விசாரித் தனர். அப்போது அங்கு காரில் வந்த கோவிந்தன், போலீஸ் ஜீப் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றார்.

போலீஸார் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றபோது, சப்-இன்ஸ் பெக்டர் தங்க முனியசாமி, முதல் நிலைக் காவலர் சவுந்தரபாண்டியன் ஆகியோரை கோவிந்தன் அரிவாளால் வெட்டி னார். சப்-இன்ஸ்பெக்டர் தற்காப்புக் காக சுட்டதில் ரவுடி கோவிந்தன் குண்டு பாய்ந்து இறந்தார். சின்ன ராசு, துல்கருணை கைது செய்யப் பட்டு அவர்களிடம் இருந்து அரி வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து தொண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ரவுடி கோவிந்தன் தரப்பில் இருந்து அவரது உடலைப் பெற யாரும் வராததால் பிரேதப் பரிசோதனை நேற்று நடக்கவில்லை. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள கோவிந்தன் உடலை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கண்ணன் நேற்று மாலை ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காயம் அடைந்த போலீஸாரிடம் விசாரணை நடத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்