வேளாங்கண்ணியில் அன்னை தெரசாவுக்கு சிலை

By செய்திப்பிரிவு

நாகை மாவட்டம் வேளாங்கண் ணியில் அன்னை தெரசாவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரசாவின் சேவை யைப் பாராட்டி, வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் 1980-ம் ஆண்டு அன்னை தெரசா பெயரில் கட்டிடம் கட்டி, அதனை பக்தர்கள் இலவசமாக தங்குவதற்காக அர்ப்பணித்துள்ளது. இந்நிலையில், அன்னை தெரசாவுக்கு வாடிகனில் போப் ஆண்டவரால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவரை மேலும் பெருமைப் படுத்தும் விதமாக, வேளாங்கண்ணி யில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில் அவரது உருவச் சிலையை பேராலய நிர்வாகம் நேற்று நிறுவியது.

இதை முன்னிட்டு, தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் அன்னை தெரசா சிலையை ஆயர் அம்புரோஸ் புனிதம் செய்துவைத்து பீடத்தில் நிறுவினார்.

முன்னதாக அன்னை தெரசா சிலை, பேராலய முகப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடைவீதி வழியாக அன்னை தெரசா வளாகத்தை சென்றடைந்தது.

இந்த ஊர்வலத்தில் பங்குத் தந்தைகள், அருட்சகோதரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

உலகம்

4 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்