புதுக்கோட்டை அருகே எண்ணெய் கிணற்றில் தீ

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே வாணக்கன்காட்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் இருந்து வெளியேறிய எண்ணெய் நேற்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாணக்கன்காட்டில் கடந்த 1991-ம் ஆண்டில் 5 ஏக்கருக் கும் மேற்பட்ட நிலத்தை விவசாயி களிடம் இருந்து கைப்பற்றி அங்கு சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. பின்னர், அங்கி ருந்து எரிபொருள் சோதனை மேற் கொள்ளப்பட்டது. அதன்பின், கடந்த பல ஆண்டுகளாக எந்தப் பணியையும் அங்கு மேற்கொள்ள வில்லை. கடந்த சில மாதங்களாக ஆழ்துளைக் கிணற்றின் மேல் பகுதியில் உள்ள மூடியில் ஏற்பட்ட விரிசல் வழியாக கருப்பு நிறத்தில் எண்ணெய் கொப்பளித்து வெளி யேறுகிறது. வெளியேறும் எண்ணெய் ஆழ்துளைக் கிணற்றை சுற்றிலும் சுமார் 10 அடி ஆழத்துக்கு அமைக்கப்பட்ட தொட்டியில் நிரம்பி விளைநிலத்தில் பாய்கிறது.

இந்த இடத்தை கடந்த வாரம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பொறி யாளர்கள் ஆய்வு செய்த பின்பும், வெளியேறும் எண்ணெய்யை அடைக்க எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று எண் ணெய்ப் படலம் தீப்பிடித்து சுமார் 100 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை குடங் களில் தூக்கிக் கொண்டு வந்து ஊற்றி தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தால், அதைச்சுற்றி சாகுபடி செய்திருந்த எள், கடலை உள்ளிட்ட பயிர்கள் கருகிவிட்டன.

ஓஎன்ஜிசி எண்ணெய் ஆழ் துளைக் கிணறு பகுதியில் திடீ ரென தீப்பற்றிய சம்பவம் அப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் காட்டுத் தீயாக பரவியதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

எண்ணெய் கிணறு தானாக தீ பற்றிக்கொண்டதா, வேடிக்கை பார்க்க வந்தவர்கள் தீப்பற்ற வைத்தார்களா என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

தீ விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் எந்த எரிபொரு ளையும் எடுக்கக்கூடாது. ஆழ் துளைக் கிணற்றிலிருந்து எண் ணெய் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், பெண்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

35 mins ago

க்ரைம்

52 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்