ஸ்ரீரங்கத்தில் ஜெ.தீபா பேரவை: சசிகலா அதிருப்தியாளர்கள் தொடங்கினர்

By செய்திப்பிரிவு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜெ.தீபா பேரவை தொடக்க விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தைத் தொடங்கிவைத்து ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி ரங்கராஜ் பேசியபோது, “அதிமுகவின் புதிய தலைமை பிடிக் காததாலும், ஜெயலலிதாவின் உரு வத்தையொத்த அவரது ரத்த சொந்த மான தீபாவின் பின்னால் அணி வகுத்துச் நிற்க முடிவெடுத்துமே இந்தப் பேரவை தொடங்கப்படு கிறது. பேரவையின் சின்னமாக தற் போதைக்கு இரட்டை ரோஜாவை வடிவமைத்துள்ளோம்” என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ரங்கராஜ் கூறும்போது, “கட்சியின் மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சுமார் 50-க்கும் அதிகமான கிளைச் செயலாளர்கள் மற்றும் 10-க்கும் அதிகமான மாவட் டங்களைச் சேர்ந்த அதிமுகவினர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்” என்றார்.

சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் எம்ஜிஆர் வல்லரசு, கோவையைச் சேர்ந்த எம்ஜிஆர் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் கோவைக்குமார், நாகப் பட்டினத்தைச் சேர்ந்த குரு.காளி தாஸ், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த முரளி ஆகியோர், பேரவை தொடங்கு வதன் நோக்கம், அதிமுகவுக்கு தீபா தலைமையேற்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்