மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருச்சி சிவா எம்பியின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்திய பாஜகவினர்: திமுக, பாஜகவினரின் எதிர் கோஷங்களால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

திருச்சியில் நேற்று மத்திய அமைச் சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவின் பேச்சுக்கு பாஜகவினர் இடையூறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் திருச்சி- திருநெல் வேலி இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, திட்டங்களை தொடங்கிவைத்து பேசினார்.

நிகழ்ச்சிக்கு திமுக எம்பி சிவா தாமதமாக வந்தார். அவர் வந்த போது அமைச்சர் சுரேஷ் பிரபு பேசிக்கொண்டு இருந்தார். அதைத் தொடர்ந்து, கோரிக்கைகள் தொடர் பாக தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என்று சிவா கேட்ட தற்கு முதலில் மறுத்த ரயில்வே அமைச்சர், பின்னர் பேச அனுமதித் தார். அதைத்தொடர்ந்து எம்பி சிவா ஆங்கிலத்தில் பேசினார்.

அப்போது, பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த பாஜக வினர் தமிழில் பேசுமாறு முழக்கமிட் டனர். இதனால், சிவாவின் பேச் சுக்கு இடையூறு ஏற்பட்டது. மக் களின் கோரிக்கை மத்திய அமைச் சருக்கு புரிய வேண்டும் என்பதற் காகவே ஆங்கிலத்தில் பேசுவதாக சிவா கூறியும், பாஜகவினர் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

அந்த நேரத்தில் மரபுகளை மீறி விழா நடைபெறுவதாகவும், பேச்சை முடித்துக்கொள்ளுமாறும் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் நடராஜன், சிவாவிடம் கூறினார். அதற்கு, “மக்கள் பிரச்சினைக்காக நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும். இங்கு அரசியல் செய் யாதீர்கள்” என்று நடராஜனுக்கு பதில் அளித்துவிட்டு சிவா தனது பேச்சை தொடர்ந்தார்.

பின்னர், விழா முடிந்து அனை வரும் வெளியே வந்தபிறகு செய்தி யாளர்களை சிவா எம்பி சந்தித்த போது, அவரை நோக்கி வந்த பாஜக வினர், ‘பாரத் மாதாகீ ஜே’ என்று முழக்கமெழுப்பினர். பதிலுக்கு திமுகவினர், ‘இந்தி ஒழிக’ என்று முழக்கமிட்டனர். இதனால், இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. ஆனால், இரு தரப்பினரும் கலைந்து சென்றுவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

வர்த்தக உலகம்

20 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்