மேற்கு வங்க மாநிலத்தில் கம்யூ. தோற்றது எப்படி? - டி.கே.ரங்கராஜன் எம்பி விளக்கம்

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், லெனினிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கு வாக்களித் தவர்களுக்கும் எதிராக வன்முறைகள் நடத்தப்பட்டு வரு கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிக வாக்குகளை பெற்ற இடங்களில் வீடு வீடாகச் சென்று அங்குள்ள மக்களை தாக்குகிற சம்பவங்கள் நடக்கின்றன.

எங்கள் கட்சியின் 500 அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு காவல்துறையினரும், ரவுடிகளும் துணைபோயுள்ளனர்.

எங்களுக்கு வாக்களித்தவர் களுக்கு எதிராக பஞ்சாயத்து களை நடத்தி வரி வசூல் செய் கின்றனர். இதற்கு பாஜகவும் துணைபோயுள்ளது. பாஜகவின் 7 முதல் 8 சதவீதம் வாக்குகள் திரிணாமூல் காங்கிரஸுக்கு சென் றுள்ளன. இதனால்தான் கம்யூ னிஸ்ட் தோல்வியை சந்தித்தது.

மதுரா நகரில் காவல் துறையினர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இடது சாரிகளுக்கு எதிரான இந்த தாக்குதல் நாளை ஜனநாய கத்துக்கு எதிராகவும் நடத்தப் படும். அடுத்து பத்திரிகை, ஊடகங்கள் மீது நடத்தப்படும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்