தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் நல்லுறவை கடைபிடிக்க வேண்டும்: அமைச்சர் நிலோபர் கபீல் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தொழிலாளர்களுடன் தொழில் நிறுவனங் கள் நல்லுறவைக் கடைபிடிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் கூறினார்.

தமிழக தொழிலாளர் துறை சார்பில் சிறந்த நிர்வாகம் மற்றும் சிறந்த தொழிற்சங்கங்களுக்கு தொழில் நல்லுறவு விருது வழங்கும் விழா சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நேற்று மாலை நடந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாக கலந்துகொண்டு, சிறந்த நல்லுறவைக் கடைபிடிக்கும் 85 நிர் வாகங்கள், தொழிற்சங்கங்களுக்கு விருது களை வழங்கினர். தொழிலாளர், வேலை வாய்ப்புத் துறை செயலாளர் பெ.அமுதா தலைமை தாங்கினார். தொழிலாளர் துறை ஆணையர் கா.பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

விழாவில் அமைச்சர் நிலோபர் கபீல் பேசியதாவது:

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ம் ஆண்டு நடந்தது. இதில் கையெழுத்தான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 68 திட்டங்கள் முன் னேற்றம் அடைந்துள்ளன. ரூ.29 ஆயிரத்து 615 கோடி முதலீட்டால் 76,271 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தொழிலாளர்கள் மகிழ்ச்சி

தமிழக அரசின் செயல்பாட்டால் போக்குவரத்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அரசு தொழிலாளர் நலனைக் காக்கிறது. தொழிலாளர்களுடன் தொழில் நிறுவனங்கள் நல்லுறவைக் கடைபிடிக்க வேண்டும். தொழிலாளர்கள், நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவதே தொழில் உறவாகும். தொழிலாளர் நிர்வாகம் இடையே உறவை மேம்படுத்துவது, தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்குவது ஆகியவையே தொழிலாளர் துறையின் முக்கியப் பணியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பா.பெஞ்சமின் பேசும்போது, ‘‘தொழில் துறையில் நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது’’ என்றார்.

முன்னாள் நீதிபதியும், நல்லுறவு விருது தேர்வுக்குழு தலைவருமான ஜே.ஏ.கே.சம்பத், தொழிலாளர் துறை இணை ஆணையர் (சமரசப் பிரிவு) செ.கலைவாணி மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் விழாவில் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்