தேசிய அளவில் ஆவணப்பட ஆய்வரங்கம்: 14-ம் தேதி சென்னையில் நடக்கிறது

By செய்திப்பிரிவு

‘ஒலிவியம் படைப்பகம்’ என்ற தன் னார்வ அமைப்பு, சென்னை பல் கலைக்கழகம் மற்றும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆகியவை இணைந்து நடத்தும் ‘ஆவணப்படம் அவசரம் அவசியம்’ என்ற தலைப்பிலான தேசிய ஆய்வரங்கம் வரும் 14-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா கடற்கரை வளாக கலை அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சி யின் தொடக்க விழாவில் ஞான. ராஜசேகரன் ஐ.ஏ.எஸ், எழுத்தாளர் கள் எஸ்.ராமகிருஷ்ணன், பாமரன், திரைப்பட இயக்குநர்கள் சீனு ராமசாமி, சி.வி.குமார், பேராசி ரியர்கள் அ.பாலு, சாரோன், பர்வின் சுல்தானா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

தொடக்க விழாவுக்குப் பின் மூன்று அமர்வுகள் நடைபெற உள் ளன. முதலீடும் பரவலாக்கமும்’, ‘ஆவணப்படமும் ஆவணங்களும்’, ‘உள்ளடக்கங்களும் வரையறை களும்’ என அந்த மூன்று அமர்வு களுக்கும் தலைப்பிடப்பட்டுள்ளன. இந்த அமர்வுகள் ஒவ்வொன்றிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங் களில் இருந்தும் சர்வதேச அளவிலும் ஆவணப்பட இயக்கு நர்களும் ஆளுமைகளும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள்.

அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் சொர்ணவேல், சமூகச் செயற்பாட்டாளர் பாமயன், ஆவணப்பட இயக்குநர்கள் பாரதி கிருஷ்ணகுமார், கோம்பை அன்வர், லீனா மணிமேகலை, ரவிசுப்ரமணி யன், ஆர்.ஆர்.சீனிவாசன், எழுத் தாளர் பிரபஞ்சன் உள்ளிட்ட 20-க்கும் அதிகமான ஆளுமைகள் அமர்வு களில் பங்கேற்கின்றனர்.

எதற்காக ஆய்வரங்கம்?

ஆய்வரங்கம் எந்த நோக்கத் துக்காக நடத்தப்படுகிறது என இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து வருபவர்களில் ஒருவரும் ஆவணப் பட இயக்குநருமான பு.சாரோ னிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

“ஆவணப்படங்கள்தான் நம் வர லாற்றின் முகங்கள். வரலாறு வழியே நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் அனைத்துமே மிகச்சிறந்த படிப் பினைகள். அதை ஒரு சமூகம் கற்றுக்கொண்டால்தான், மீண்டும் நமது சமூகம் தவறுகளில் விழுந்து பின்னோக்கிச் சென்றுவிடாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடியும். இந்தப் பணியை இன்று நமது கல்வியும் செய்வதில்லை; அரசும் செய்வதில்லை. தனிப்பட்ட மனிதர்களின் கடும் உழைப்பு, பொருட்செலவு ஆகியவற்றால் உருவாகும் ஆவணப்படங்கள் இந்த அறிவையும் விழிப்புணர்வையும் நமக்குத் தந்துவிடும் மிகச்சிறந்த ஊடகமாக விளங்குகின்றன.

ஆனால் ஆவணப்படங்களுக் குப் பள்ளி, கல்லூரிகள், திரை யரங்குகள், தொலைக்காட்சிகள் என எங்கும் இடமில்லை. ஆவணப்படங்களுக்கு முதலீடு செய்ய அரசோ தனியாரோ முன்வருவதில்லை. இத்தனை இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் இயங்கும் ஆவணப்படத்துறையை காப்பாற்றவேண்டிய மிக நெருக் கடியான கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

ஆவணப்படங்களுக்கான முத லீடுகளை எப்படித் திரட்டுவது, சர்வதேசத் தரத்துடன் திரைப் படங்களைப் போல மக்கள் பார்க் கும் விதத்தில் அவற்றை சுவாரஸ்ய மான விதத்தில் மாற்றுவது, அவற் றைக் காப்பாற்றி மக்களிடம் எடுத்துச் செல்லச் செய்தி மற்றும் பொழுது போக்கு ஊடகங்கள் எப்படிக் கைகொடுக்க முன்வரவேண்டும் என்பது உட்பட இத்துறையின் அனைத்து சாத்தியங்களையும் விவாதித்துத் தீர்வு காண்பதே இந்த ஆய்வரங்கத்தின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நல்லக்கண்ணு பங்கேற்பு

ஆய்வரங்கத்தின் நிறைவு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, படத்தொகுப்பாளர் பீ.லெனின், திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன், நபார்டு வங்கி நாகூர் அலி ஜின்னா உள்ளிட்டோர் பங் கேற்கின்றனர். மேலும், ஆய்வரங் கில் சிறந்த ஆவணக்காப்பாள ருக்கான 2017-ம் ஆண்டு ஒலிவியம் விருது திருநின்றவூர் தி.சந்தான கிருஷ்ணனுக்கு வழங்கப்பட இருக் கிறது. இந்த ஆய்வரங்கம் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள 8015650530 என்ற கைப் பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

12 mins ago

சினிமா

17 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்