தங்கம் பவுனுக்கு ரூ.136 உயர்வு

By செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு அதிகரித்து வருவதால், தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 152-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு, தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்துக்கு 800 ஆக இருந்த தங்கம் விலை கடந்த வாரம் ரூ.24 ஆயிரத்தையும் தாண்டியது.

நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 152-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 19-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 2-க்கு விற்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

41 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்