அதிவேகமாக வந்த காரால் விபத்து: மக்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சேலத்தில் காரை தாறு மாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞரை பொது மக்கள் தாக்கினர். சிகிச்சைக்கு சேர்க் கப்பட்ட அவர் மருத்துவமனை யில் உயிரிழந்தார்.

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி நோக்கி வந்த கார், தாதகாப்பட்டி கேட், பிரபாத் வழியாக அதி வேகத்துடன் தாறுமாறாக வந்தது. வழியில் சாலையில் சென்றவர்கள், ஆங்காங்கே நின்றிருந்த வாகனங்கள் ஆகிய வற்றின் மீது மோதியபடி நிற்காமல் சென்றது.

பொதுமக்களும், நெடுஞ் சாலை ரோந்து போலீஸாரும் அந்த காரினை விரட்டிப்பிடித்து நிறுத்தினர். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். காரினை தாறு மாறாக ஓட்டி விபத்து ஏற்படுத் திய இளைஞரை பொதுமக்கள் தாக்கினர். மது போதையில் இருந்த அவரை மீட்ட போலீஸார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அவரிடம் இருந்த ஆவணங் களைக்கொண்டு விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவரின் மகன் இக்னேஷியஸ்(25) என்பது தெரியவந்தது. இந்நிலை யில் நேற்று காலை மருத்துவ மனையில் சிகிச்சை பலனளிக் காமல் உயிரிழந்தார். இது குறித்து கொலை வழக்காக பதிவு செய்து அன்னதானப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்