ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர் ஜெயலலிதாவிடம் வாழ்த்து

By செய்திப்பிரிவு

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஈரோட்டை சேர்ந்த சரவணன், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஈரோடு மாவட்டம், காந்தி நகரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகன் எஸ்.சரவணன். இவர் 10-ம் வகுப்பு தேர்வில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் கடந்த 2005-ல் 10 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றார்.

தொடர்ந்து, 2007-ல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றார். சென்னை எம்ஐடியில் ஏரோநாட்டிக்கல் பொறியல் படிப்பதற்கான இடம் கிடைத்தது. ஏழ்மை காரணமாக படிக்க முடியாமல் இருந்தார். இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, சரவணன் 4 ஆண்டுகள் படிப்பதற்கான நிதியை எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து வழங்கினார். தொடர்ந்து, அதிக மதிப்பெண்களுடன் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற சரவணன், இந்தாண்டு இந்திய ஆட்சிப்பணி தேர்விலும் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவை சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்து, கல்விச் செலவுக்கான உதவிகளை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்