வேலூர் அருகே விவசாய நிலத்தில் ராணுவத்தில் பயன்படுத்தும் கையெறி குண்டு கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

வேலூர் அருகே விவசாய நிலத்தில் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கையெறி வெடிகுண்டை போலீஸார் மீட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் விசாரணை நடத்தினார்.

வேலூர் மாவட்டம் அமிர்தி அடுத்த நாகநதி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தஞ்சி(54). நேற்று காலை தஞ்சி, அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். அப்போது, உருண்டை வடிவில் இரும்பினால் ஆன வெடிகுண்டு ஒன்று தனது நிலத்தில் கிடப்பதை பார்த்துள்ளார். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸார் விரைந்து வந்து வெடிகுண்டை பறிமுதல் செய்தனர். அந்த வெடிகுண்டு, ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் எதிரிகள் மீது வீசும் சக்தி வாய்ந்த கையெறி வெடிகுண்டு என்பதும் அது கடந்த 1979-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது எனவும் தெரியவந்தது. அந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் சுமார் 10 மீட்டர் தொலைவுக்கு சேதமடைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

தகவல் அறிந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பகலவன் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். ராணுவத்தில் வீரர்கள் பயன்படுத்தும் வெடிகுண்டை அப்பகுதியில் விவசாய நிலத்தில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

சினிமா

46 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

மேலும்