சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்தவர் கைது

By செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவ தாகக் கூறி ஏமாற்றி, பல லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட் டார்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன் பட்டி அண்ணாமலை கார்டன் பகுதி யைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(24). இவர், கடந்த 6-ம் தேதி நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், சென்னை ராமாபுரம் சத்யசாய் நகரில் உள்ள ‘மேக் இம்போர்ட் அன்டு எக்ஸ்போர்ட்’ என்ற நிறுவனம் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக ஒரு நாளிதழில் விளம்பரம் கொடுத்து இருந்தது.

அதைப் பார்த்து, கடந்த மார்ச் மாதம் அந்நிறுவனத்தின் உரிமை யாளர் அரசு(42) என்பவரை அணுகியதில், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ரூ.80 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டார்.

ஆனால் வேலை வாங்கித் தர வில்லை. அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்த்தபோது, அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. அவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டி ருந்தது.

புகாரின்பேரில் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆய்வாளர் அருணாச் சலராஜா தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தினர். அதில், சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் மணிகண்டன் தெருவில் அரசு என்ற கற்பக அரசு(42) தலைமறைவாக இருப்பது தெரிந்தது.

பலரிடம் மோசடி

மேலும், அவர் பலரிடம் வேலை வாங்கி தருவதாக பல லட்சங்கள் மோசடி செய்திருப்பதும் தெரியவந் தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்