காற்றழுத்த தாழ்வு நிலை: 3வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

By ராமேஸ்வரம் ராஃபி

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. மூன்றாவது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

தொடர்ந்து இரண்டாவது நாளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 52 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாம்பன் 23 மி.மீட்டர், தொண்டி 22 மி.மீட்டர், தங்கச்சிமடம் 22 மி.மீட்டர், மண்டபம் 20 மி.மீட்டர், ஆர்.எஸ். மங்கலம் 20 மி.மீட்டர், ராமநாதபுரம் 15 மி.மீட்டர்.மழையும் பதிவாகியுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் தொண்டி மீனவர்கள் மூன்றாவது நாளாக புதன்கிழமை 50,000க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் ஆழம் குறைந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் நாட்டுப்படகு மற்றும் கட்டு மரங்களில் மீனவர்கள் சிலர் கட லுக்குச் சென்றனர்.

இந்த ஆண்டு பருவ மழை சரிவர பெய்யாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் குளங்கள், கிணறுகள் எதுவும் நிரம்பவில்லை. கடடந்த 2 மாதங்களில் உருவான பல்வேறு புயல் சின்னம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்