மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை மாவட்டத்தில் 01.05.2017 அன்று மே தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மே தினத்தை முன்னிட்டு வருகின்ற 01.05.2017 திங்கட்கிழமை தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள்) விதிகள் 2003, விதி 12-ன்படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 || (a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்.எல்..3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (A) உரிமம் கொண்ட தமிழ்நாடு சுற்றுலா கழக பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும் அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது தவறினால் மேற்குறிப்பிட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அன்புச்செல்வன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

க்ரைம்

48 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்