சரக்குப் பெட்டகங்களை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க வசதி: தூத்துக்குடி துறைமுகத்தில் அறிமுகம்

By செய்திப்பிரிவு

நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் முறையில் சரக்குப் பெட்டகங்களை கண்காணிக்கும் வசதி தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.

துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்கப்படும் சரக்குப் பெட்டகங்கள், தூத்துக்குடியில் ஆங்காங்கே இருக்கும் சரக்குப் பெட்டக கிட்டங்கிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின் றன. அங்கு சுங்கத்துறை சோதனைக் குப் பின், சான்றுகள் அளிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

துறைமுகத்துக்கும், சரக்குப் பெட்டக கிட்டங்கிகளுக்கும் இடையே பெட்டகங்களை கொண்டு செல்லும் போது பல்வேறு தவறுகள் நடைபெறுகின்றன. மேலும், குறித்த நேரத்துக்கு வந்து சேராமல் காலதாமதம் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் துறைமுகத்துக்கும் - கிட்டங்கிகளுக் கும் இடையே பெட்டகங்களை கண்காணிக்க புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. `கன்டெய்னர் டிஜிட்டல் எக்சேஞ்ச்’ (கோடெக்ஸ்) என்ற இந்த புதிய வசதி இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. தூத்துக்குடி சரக்கு பெட்டக கிட்டங்கிகள் சங்கம், தூத்துக்குடி சுங்கத்துறை புரோக்கர் சங்கம், தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளன.

இதன்மூலம் தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்துக்கும் - தூத்துக்குடி பகுதியில் உள்ள சரக்கு பெட்டக கிட்டங்கிகளுக்கும் இடையே, பெட்டகங்களின் நடமாட்டத்தை ஆன்லைன் மூலம் கண்காணிக்கலாம். மேலும், இந்த செல்பேசி செயலியை தங்கள் செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் அதன் மூலமும் பெட்டகங்களை கண் காணிக்கலாம்.

சரக்குப் பெட்டகங்களின் எண் களை பதிவு செய்தால் போதும், அந்தப் பெட்டகம் எந்த பகுதியில் இருக்கிறது, எப்போது வந்து சேரும் என்பன போன்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

தூத்துக்குடியில் நேற்று நடை பெற்ற விழாவில், சென்னை சுங்கத் துறை தலைமை ஆணையர் பிரணாப் குமார் தாஸ் இப்புதிய வசதியை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, `பெட்டகங் களை கண்காணிக்க பல வசதிகள் நடைமுறையில் இருந்தாலும், டிஜிட்டல் முறையில் கண் காணிக்கும் வசதி தற்போது தான் முதல் முறையாக தொடங்கப் பட்டுள்ளது. இந்த வசதியில் ரகசிய குறியீட்டு எண் (பார்கோடு) அடிப் படையில் சரக்குப் பெட்டகங்கள் கண்காணிக்கப்படும்’ என்றார் அவர்.

இதேபோல் பெட்டகங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சரக்குகள் ஏற்றுவதை தடுக்கும் வகையில், `சோலாஸ் வி.ஜி.எம்.’ என்ற நவீன வசதியும் இன்று முதல் தூத்துக்குடி துறைமுகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வசதியை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ச.ஆனந்த சந்திரபோஸ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி சரக்கு பெட்டக கிட்டங்கிகள் சங்கத் தலைவர் ஜே.டேவிட்ராஜா, சுங்கத்துறை புரோக்கர்கள் சங்கத் தலைவர் பி.ஜெயந்த் தாமஸ், தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் கே.சி.ஜானி, கூடுதல் ஆணையர் சுரேஷ், வ.உ.சி. துறைமுக துணைத் தலைவர் சு.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

28 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

52 mins ago

க்ரைம்

58 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்