வறட்சியால் பாதித்த பகுதிகளை பிரதமர் நேரில் பார்வையிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கடிதம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப் பட்ட பகுதிகளை நேரில் பார்வை யிட வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக இளை ஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதி யுள்ள கடிதம்:

தமிழகத்தில் வறட்சியால் பயிர் கள் கருகியதை தாங்கிக்கொள்ள முடியாமல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 விவசாயிகள் உயி ரிழந்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அர சுக்கு தேசிய மனித உரிமை ஆணை யம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் வறட்சி நிலைமை குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்து நிதி உதவி பெற்றுவிட்ட நிலையில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தமிழக அரசு, ஏற்கெனவே ரூ.5 லட்சம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சுமார் ரூ.45,000 கோடி நிதிப்பற்றாக்குறை இருக்கிறது. அதனால், விவசாயிகளுக்கு உதவி வழங்கும் சூழலில் தமிழக அரசு இல்லை.

விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக் கும் பாதிப்புகளை சரிசெய்ய மத் திய அரசுதான் உதவ வேண்டும். தமிழகத்தில் வறட்சியால் பாதிக் கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் நேரில் பார்வையிட்டு, தமிழகத்தின் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீத மும், நிலமற்ற தொழிலாளர் களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண் டும். ஊரக வேலைவாய்ப்பு உறு தித் திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண் ணிக்கையை 150 ஆக அதிகரிக்க வேண்டும். உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக் கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

ஜோதிடம்

53 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்