மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன மாநாடுகள்: சென்னையில் நாளை தொடக்கம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசு ஊழியர் மகா சம் மேளனத்தின் (தமிழ்நாடு) மாநில மற்றும் தேசிய மாநாடு ஆகஸ்ட் 15-ல் (நாளை) சென்னையில் தொடங்குகிறது.

இது தொடர்பாக சம்மேளனத் தின் மாநில பொதுச்செயலர் எம்.துரைபாண்டியன் சென்னை யில் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த சம்மேளனத்தின் தமிழ் நாடு மாநில மாநாடு ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் விடுதலை போராட்டத் தியாகி என்.சங்கரய்யா பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைக்கிறார். சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலர் என்.கிருஷ்ணன் சிறப் புரையாற்றுகிறார்.

16-ம் தேதி, சம்மேளனத்தின் 25-வது தேசிய மாநாடு அதே இடத்தில் நடைபெறுகிறது. சிஐடியூ தொழிற்சங்க தேசிய தலைவர் ஏ.கே.பத்மநாபன் மாநாட்டை தொடங்கிவைக்கிறார். எம்பிக்கள் டி.கே.ரங்கராஜன், ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று சிறப்புரையாற்று கிறார்கள். சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

17-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டை முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி தொடங்கி வைக்கிறார்.

செப்டம்பர் 2-ல் காலவரை யற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம். இது தொடர்பாக 3 நாள் மாநாட்டில் விவாதித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

54 mins ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்